பிரியங்கா மோகனுக்கு எதிராக சதி! விஜய் நிறுவனம் மீது பரபரப்பு புகார்

ச்

நடிகை பிரியங்கா மோகன் ரூட் நிறுவனத்திலிருந்து விலகியதால்தான் அவர் மீது தனிப்பட்ட தாக்குதல்களும், ட்ரோல்களும் நடக்கின்றனவா? என்ற கேள்வி பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப் தொடரில் நடிக்கும் நடிகை பிரியங்கா மோகன் | Actress Priyanka Mohan to  star in web series

நடிகை பிரியங்கா மோகன் திரையுலகில் நுழைந்த சில காலத்திலேயே கவனிக்கத்தக்க இடத்தை அடைந்தார். தொடர்ந்து டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றார். ஆனால், 2024 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு அவர் மீது சமூக வலைத்தளத்தில் தனிப்பட்ட தாக்குதல் மற்றும் கேலி கிண்டல்கள் அதிகரிக்கத் தொடங்கியது. முதன் முதலில் தன்னை பின் தொடர்ந்த ரசிகரைக் கண்டித்து அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் செய்யப்பட்டதுடன், அவர் ஆட்டிட்யூட் செய்வதாக அதிக அளவில் விமர்சிக்கப்பட்டார்

ரியங்கா மோகன் தனது PR ஏஜென்சியை மாற்றிய பிறகே இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்களும் ட்ரோல்-களும் வெளிவரத் தொடங்கியதாகக் குற்றச்சாட்டு உள்ளது. ஆரம்பத்தில் Route என்ற PR ஏஜென்சி தான் பிரியங்கா மோகனின் PR-ஆக இருந்தது.இது நடிகர் விஜயின் PR நிறுவனமாகும். 2010ம் ஆண்டு ஜெகதீஷ் என்பவரால் தொடங்கப்பட்டு விஜய்-க்கும் PR வேலைகளைச் செய்து வந்தது. பிறகு, நடிகைகள், இயக்குநர்கள் எனப் பல பிரபலங்களுக்கு PR வேலையைச் செய்து வருகிறது. PR வேலையை தாண்டி திரைப்பட தயாரிப்பு பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொள்ள தொடங்கியது. இவர்களிடம் சேவையைப் பெறும் பிரபலங்கள் தங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறும் பட்சத்தில், அவர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் எதிர்மறையான, உண்மைக்குப் புறம்பான விமர்சனங்களைப் பரப்பச் செய்கின்றனர் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Share this story