`எம்புரான்' படம் தொடர்பான சர்ச்சை... கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வருத்தம்..!

`எம்புரான்' படம் தொடர்பான சர்ச்சை வருத்தமளிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியானது 'எம்புரான். கடந்த 2019- ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்” படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும். எம்புரான்’ திரைப்படம் உலகளவில் வெளியான 2 நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. எம்புரான் படத்தின் வில்லன் காதாபாத்திற்கு பால்ராஜ் படேல் என்கிற பாபா பஜ்ரங்கி என்று பெயரிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்துத்துவா வலதுசாரி அமைப்பான பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவரான பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி, 2002 குஜராத் கலவரத்தில், 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
2022 குஜராத் கலவரத்திற்கு தொடர்புடைய பாபுபாய் படேல் என்கிற பாபு பஜ்ரங்கி என்ற பெயருடன் எம்பூரான் படத்தின் வில்லன் பெயர் பொருந்தி போவதால் இப்படத்திற்கு இந்துத்த்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் குஜராத் கலவரங்களை குறித்து காட்சிகள் இருப்பதால் இதை இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
The communal hate campaign against #Empuraan and its creators is deeply disturbing. This is yet another example of a growing pattern where coercion and intimidation are used to silence dissent - tactics that have always been hallmarks of authoritarianism. Undermining creative…
— Pinarayi Vijayan (@pinarayivijayan) March 30, 2025
இதனால் மோகன்லால் மன்னிப்பு கேட்டு பதிவிட்டு இருந்தார். மேலும் எம்புரான் படத்திற்கு 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரவு கொடுத்து பேசியுள்ளார். திரைப்படத்தை சமீபத்தில் திரையரங்கிள் பார்த்தார் பினராயி விஜயன். அவர் ""நாட்டின் மிக மோசமான இன அழிப்பு சம்பவத்தை 'எம்புரான்' படத்தில் காட்சியாக வைத்தது சங்க பரிவாரம், ஆர்.எஸ்.எஸ், பாஜகவை கோபமடையச் செய்துள்ளது. படத்திற்கு எதிராக பகிரங்கமாக மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். இதன் எதிரொலியாக படத்தின் காட்சிகளை நீக்கும் நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.பிரிவினைவாதத்திற்கு எதிராக பேசிய என்ற ஒரே காரணத்தால் ஒரு கலை படைப்பு அழிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல" என கூறியுள்ளார்.