'பராசக்தி' தலைப்பில் தொடரும் சர்ச்சை... நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் எதிர்ப்பு..

parasakthi

 ‘பராசக்தி’ படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டிருப்பதால் அந்த பெயரைப் வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடவேண்டும் என்று நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களிலும், நாயகியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷுக்கு 100வது படமாகவும் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

sk

 

இதையடுத்து, இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இப்படத்திற்கு 'பராசக்தி்' என்று பெயரிட்டுள்ளனர். நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி” பெயரை பயன்படுத்திக்கொள்ள ஏ.வி.எம்.நிறுவனம் அனுமதி வழங்கி வாழ்த்தி இருந்தது. இதனிடையே, 'பராஷக்தி்' தலைப்பை கடந்தாண்டே பதிவு செய்துவிட்டதாக நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருந்தார். அருண் பிரபு இயக்கும் படத்திற்கு தமிழில் 'சக்தித் திருமகன்” என்றும் தெலுங்கில் ’பராஷக்தி்' எனவும் பெயரிடப்பட்டு பதிவு செய்துள்ளதாக கூறியுள்ள விஜய் ஆண்டனி, பதிவிற்கான ஆவணத்தையும் வெளியிட்டு இருந்தார்.

parasakthi
இந்த நிலையில், எங்களுக்கு முழு உரியைமான ’பராசக்தி்' திரைப்படத்தின் பெயரை வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி கண்சேன் நடிப்பில் 1952-ல் வெளியான 'பராசக்தி' படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளிவிழா காண இருக்கும் வேளையில், 'பராசக்தி' படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டு அதற்கான பணியை தொடங்க இருப்பதாகவும் நேஷனல் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தலைப்புக்கு தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படத்தின் புதிய போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Share this story