குக் வித் கோமாளி புகழ் வீட்டில் குவா குவா சத்தம்..?

1

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகழ் தனது நீண்ட கால தோழி பென்சி என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை தனது மகள் அல்ல என்னுடைய இன்னொரு தாய், எங்கள் வீட்டு மகாராணி என்று புகழ் பதிவு செய்து உணர்ச்சிவசப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வளர்த்து வரும் செல்ல நாய்க்குட்டி 4 குட்டிகளை ஈன்று உள்ளதாக அறிவித்துள்ளார். ஆண் ஒன்று, பெண் மூன்று என்று கூறியுள்ள அவர் அந்த குட்டிகளை கையில் ஏந்தியவாறு வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது. வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த புகைப்படத்துக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வரும் நிலையில் ’நீங்கள் கடந்த வாரம் ஏன் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரவில்லை, சீக்கிரம் வாருங்கள்’ என்று சிலரும் ’குட்டிக்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்றும் ’எனக்கு ஒரு குட்டி கொடுங்கள், நான் நன்றாக வளர்க்கிறேன்’ என்று சிலரும் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தில் புகழ் மற்றும் அவரது மனைவி  பென்சி கையில் நாய்க்குட்டியுடன் இருப்பதை பார்த்து ஏராளமான வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story