குக் வித் கோமாளி சீசன் 6 அப்டேட்...!

CWC


குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுக்கு மன அழுத்தம் நீங்குவதாக ரசிகர்களால் கூறப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 6வது சீசன் மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. கடந்த சீசனில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்றிருந்த இருந்த நிலையில், இந்த சீசனில் புதிதாக சமையல் கலைஞர் கௌசிக்கும் பங்கேற்கவுள்ளார். 

தொடர்ந்து ஆறாவது சீசனாக ரக்ஷன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். கடந்த சீசன்களில் கோமாளிகளாக(சமையல் தெரியாதவர்) பங்கேற்ற புகழ், ராமர், சரத், சுனிதா, குரேஷி இவர்களுடன் புதிய கோமாளிகளாக நடிகை சௌந்தர்யா, பாடகர் பூவையார், யூடியூப் பிரபலம் சர்ஜின், நடன கலைஞர் டோலி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story