கும்கி இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அஸ்வின்!?
குக் வித் கோமாளி அஸ்வின் இயக்குனர் பிரபு சாலமன் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலம் ஆகியுள்ளார் அஸ்வின். சினிமாவில் ஹீரோ ஆகவேண்டும் என்று கனவோடு சென்னை வந்த அஸ்வினுக்கு பல ஆண்டுகள் கழித்து குக் வித் கோமாளி வரப்பிரசாதமாய் அமைந்தது. தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்தப் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை ஹரிஹரன் என்பவர் இயக்குகிறார். படத்திற்கு என்ன சொல்ல போகிறாய் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விவேக் மேர்வின் கூட்டணி இசையமைக்கின்றனர்.

இந்நிலையில் அஸ்வின் தனது அடுத்த படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரபு சாலமன் மைனா, கயல், கும்கி உள்ளிட்ட நல்ல வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியுள்ளார் . இயக்கத்தில் கடைசியாக காடன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது அவர் அஸ்வின் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாகக் கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

