சர்ச்சை சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய கூல் சுரேஷ்

சர்ச்சை சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய கூல் சுரேஷ்

சரக்கு இசை வௌியீட்டு விழாவில் கூல் சுரேஷின் அநாகரீக செயலுக்கு கடும் கண்டனம் எழுந்து வரும் நிலையில், அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சரக்கு. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும், படக்குழுவினர் அனைவரும் அதில் பங்கேற்றனர். மேடையில் கூல் சுரேஷூம் இருந்தார். 

null


கூல் சுரேஷை பேச தொகுப்பாளினி அழைத்தார். அப்போது, அவர் அருகே வந்த கூல் சுரேஷ் தொகுப்பாளினி கழுத்தில் மாலையை அணிவித்தார். இதைக் கண்டு விழாவில் பங்கேற்ற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இறுதியாக, கூல் சுரேஷின் நடவடிக்கைக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திள்ளது. பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்லவே அவ்வாறு செய்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Share this story