இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அநாகரீகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷ்

இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அநாகரீகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷ்

பட  இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ் தொகுப்பாளினியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அநாகரீகமாக நடந்து கொண்ட கூல் சுரேஷ்

மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சரக்கு. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும், படக்குழுவினர் அனைவரும் அதில் பங்கேற்றனர். மேடையில் கூல் சுரேஷூம் இருந்தார். கூல் சுரேஷை பேச தொகுப்பாளினி அழைத்தார். அப்போது, அவர் அருகே வந்த கூல் சுரேஷ் தொகுப்பாளினி கழுத்தில் மாலையை அணிவித்தார். இதைக் கண்டு விழாவில் பங்கேற்ற அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இறுதியாக, கூல் சுரேஷின் நடவடிக்கைக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திள்ளது. பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Share this story