இரண்டு வாரத்தில் ரஜினியின் கூலி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா ?
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான கூலி படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது .சன் பிச்சர்ஸ் தயாரித்த இப்படம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது .
ரஜினிகாந்தின் 'கூலி' கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், ரசிகர்களின் ஆதரவால் 500 கோடி
ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வந்த ‘கூலி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் வெளியீட்டுக்குப் பிறகு கலவையான விமர்சனங்கள் வந்ததால், வசூல் குறையும் என்ற அச்சம் இருந்தது. இருந்தாலும், ரசிகர்களின் ஆதரவு மற்றும் ரஜினியின் வெகுவான மார்க்கெட் காரணமாக, இந்த படம் வசூலில் புதிய வரலாற்றை படைத்துள்ளது.
வெளியான 14-வது நாளிலேயே ‘கூலி’ 500 கோடி கிளப்பில் இணைந்தது. இதன் மூலம், 2025-ஆம் ஆண்டு 500 கோடி வசூல் செய்த மூன்றாவது இந்திய படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு ‘Chhaava’ மற்றும் ‘Saiyaara’ ஆகிய ஹிந்தி படங்களே இந்த சாதனையை பதிவு செய்திருந்தன.

