‘கூலி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் !
கூலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கிரிஷ் கங்காதரன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்கு அமீர்கான் உடனான காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து கூலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி, கேரளா ஆகிய பகுதிகளில் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் மொத்த படபிடிப்புகளும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து சிக்கிடு பாடலின் சில காட்சிகள் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.