'கூலி' டீசர் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்...!

rajini

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் கூலி படத்தின் டீசர் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர்நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர். இப்படத்தின் ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளதாக படக்குழு அறிவித்தது.  coolie

மார்ச் மாதம் 14ம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகலாம் என தகவல் வெளியான நிலையில், ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று  கூலி படத்தின் டீசர் வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

Share this story