சிம்பு படத்தை தட்டித் தூக்கிய ‘லவ் டுடே’ இயக்குனர்... விரைவில் சம்பவம் இருக்கு !

corona kumar

சிம்பு நடிக்கவிருந்த படத்தில் ‘லவ் டுடே’ இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. தற்போது ‘பத்து தல’ படத்தை முடித்துள்ள அவர், அடுத்து யார் படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கோகுல் இயக்கத்தில் ‘கொரானா குமார்’ சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. முழுக்க காமெடி மற்றும் காதல் படமாக உருவாகும் இந்த படத்தின் ப்ரோமோ பாடலும் வெளியானது. 

corona kumar

ஆனால் இந்த படத்திலிருந்து சிம்பு விலகிவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் சிம்புவிற்கு பதிலாக ‘லவ் டுடே’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லவ் டுடே’ படத்தின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

corona kumar

ஏற்கனவே ரஜினியிடம் ஒரு கதை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பிறகு ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து திரைப்படம் ‘லவ் டுடே’. இந்த படம் பல மொழிகளில் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story