ஆர்கே செல்வமணிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி !

rk selvamani
பிரபல இயக்குனர் ஆர்கே செல்வமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

90-களில் பிரபல இயக்குனராக இருந்தவர் ஆர்.கே.செல்வமணி. விஜயகாந்தின் ‘கேப்டன் பிரபாகரன்’ உள்ளிட்ட சில சூப்பர் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஃபெப்சி சங்கத்தின் தலைவராகவும் ஆர்கே செல்வமணி உள்ளார். நடிகையும், ஆந்திர அமைச்சராகவும் இருக்கும் நடிகை ரோஜாவின் கணவரான அவர், தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள கண்ணாம்மாள் தெருவில் வசித்து வருகிறார். 

rk selvamani

இதற்கிடையே கடந்த 2016-ஆம் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போரா குறித்து சில அவதூறு கருத்துக்களை ஆர்கே செல்வமணி கூறியிருந்தார். அவரது கருத்து எதிர்ப்பு தெரிவித்த முகுந்த் சந்த் போரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 

பைனான்சியர் முகுந்த் சந்த் போரா மறைந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆர்கே செல்வமணியை ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் இன்று ஆஜராகவில்லை. அதனால் ஆர்கே செல்வமணிக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கும் வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


 

Share this story