நடிகர் மகேஷ் பாபுவுக்கு வந்த கோர்ட் நோட்டிஸ் -எதற்க்காக தெரியுமா ?
நடிகர் மகேஷ் பாபு முன்னணி தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். மகேஷ் பாபு, முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார்.இவர் இள வயதில் தன் தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் , பின்னர் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இவரது முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் வெற்றிபெற்ற படங்கள் . ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. போக்கிரி (திரைப்படம்) அதே பெயரில் தமிழில் எடுக்கப்பட்டது . மகேஷ் ஆறு நந்தி விருதுகளையும்,இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
பின்னர் மகேஷ் பாபு இந்தித் திரைப்பட நடிகை நம்ரதா ஷிரோத்கரை மணம் முடித்துள்ளார்
இப்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுஒரு சிக்கலில் சிக்கியுள்ளார். ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் மன்றம் மகேஷ் பாபுவுக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக மகேஷ் பாபு பணியாற்றி வருகிறார். இந்நிறுவனம், மகேஷ் பாபுவின் படத்தை காட்டி அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பாதிக்கப்பட்டவர்கள் ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தை அணுகியதையடுத்து, சாய் சூர்யா டெவலப்பர்ஸ், அதன் உரிமையாளர் காஞ்சர்லா சதீஷ் சந்திரகுப்த சந்திரகுப்தா மற்றும் மகேஷ் பாபு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் புரமோசனில் ஈடுபட்டதற்காக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரூ.3.4 கோடி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வருகிற 8-ம் தேதிக்குள் நுகர்வோர் மன்றத்தில் ஆஜராகுமாறு மகேஷுக்கு அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

