அஜ்மல் நடித்துள்ள வியூகம் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்

அஜ்மல் நடித்துள்ள வியூகம் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்

ஆந்திர அரசியலில் மிகப்பெரிய அளவில் கோலார்ச்சியவர் மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி. தற்போது அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக ஆட்சி புரிந்து வருகிறார்.  பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா இதே ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து வியூகம் என்கிற பெயரில் படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் அமீர் நடித்துள்ளார்.ஒரே நேரத்தில் இப்படி இரண்டு இயக்குனர்கள் ஒரே நபரின் சுயசரிதையை படமாக எடுத்து வருவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அஜ்மல் நடித்துள்ள வியூகம் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்

இந்தநிலையில், வியூகம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி 11-ம் தேதி வரை வியூகம் படத்தை திரையிட தடை விதித்து, உத்தரவிட்டனர். 
 

Share this story