கிரிக்கெட் சாதி அரசியல்... ப்ளூ ஸ்டார் விமர்சனம்...
1706200598844

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'புளூ ஸ்டார்'. இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார். இப்படத்திலிருந்து வெளியான ரயிலின் ஒலிகள் பாடல் பெரும் ஹிட் அடித்தது.
இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கிரிக்கெட்டில் நடக்கும் சாதிய அரசியலை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது. படத்தின் திரைக்கதையில் அவ்வப்போது தொய்வு ஏற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.