'தல' தோனி அளித்த அன்பு பரிசு... செம்ம ஹாப்பியில் யோகிபாபு !

yogibabu

கிரிக்கெட் வீரர் தோனி நடிகர் யோகிபாபுக்கு கொடுத்த அன்பு பரிசால் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் யோகி பாபு. ரஜினி, விஜய்,  சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அதோடு தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்  படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

yogibabu

சமீபத்தில் பா‌ ரஞ்சத்தில் தயாரிப்பில் ஷான் இயக்கத்தில் உருவான 'பொம்மை நாயகி' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையே கிரிக்கெட் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் நடிகர் யோகிபாபு. படப்பிடிப்பு நேரத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார். 

yogibabu

யோகிபாபுவின் கிரிக்கெட் ஆர்வத்தை அறிந்த நடிகர் விஜய் அவருக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக வழங்கினார். 10‌ ஆயிரம் மதிப்புள்ள அந்த பேட்டை கொடுத்த விஜய்க்கு யோகிபாபு நன்றியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கிரிக்கெட் உலகின் 'தல' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி, யோகிபாபுவிற்கு தனது கையெழுத்து போட்ட பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதனால் யோகிபாபு இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.  இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள யோகிபாபு, பேட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 


 

Share this story