இரவில் நடக்கும் க்ரைம் த்ரில்லர்...!

crime

பாலியல் குற்றம் மற்றும் மாணவர்களைப் போதை மருந்துக்கு அடிமையாக்கும் கும்பலுக்கு எதிராக உருவாகும் படம், ‘இரவினில் ஆடும் ஆட்டம்’. க்ரைம் த்ரில்லர் படமான இதன் முழுக் கதையும் இரவில் நடக்கிறது.

இதில், கதை நாயகனாக உதயா என்கிற உதயகுமார் நடித்துள்ளார். மற்றும் மாரா ராஜேந்திரன், கிரேசி, சரவணன், அஸ்மிதா, ஈஸ்வரன், சி.எம். துரை ஆனந்த் என பலர் நடித்துள்ளனர். ஜினோபாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். நல்லதம்பி இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.வி. மூவிஸ் சார்பில் சேலம் ஆர்.சேகர் தயாரித்துள்ளார். ஏ. தமிழ்ச்செல்வன் எழுதி இயக்கியுள்ளார். சேலம் ஏற்காடு பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. நவ.8-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Share this story