படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கருணாகரண்... படக்குழுவினருடன் கேக் வெட்டி உற்சாகம்
கெளதம் கார்த்தி நடிக்கும் 'கிரிமினல்' படத்தின் படப்பிடிப்பில் நடிகர் கருணாகரன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் முதல்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘கிரிமினல்’. இந்த படத்தில் சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும், கௌதம் கார்த்தி குற்றவாளியாகவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை தட்சிணாமூர்த்தி ராமர் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பாரா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்டர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். மதுரையைப் பின்னணியாக கொண்டு நடக்கும் க்ரைம் த்ரில்லர் கதையாக இப்படம் உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை 40 நாளில் ஒரே கட்டமாக முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் கருணாகரன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் கருணாகரனின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது கேக் வெட்டி மகிழ்ந்த கருணாகரனுடன் கெளதம் கார்த்திக் மற்றும் படக்குழுவினர் இருந்தனர்.