இயக்குநர் சுந்தர் சியின் தாயை நேரில் சந்தித்த ‘தல தோனி’ – ‘நடிகை குஷ்பு’ போட்ட பதிவு.

photo

எம் எஸ் தோனி இது வெறும் பெயரல்ல ஒரு உற்சாகம், உத்வேகம், வெற்றிக்கான மந்திரம் என்றுகூட கூறலாம். சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் தல தோனி தனக்கென ஒரு மஞ்சள் படை பட்டாளத்தையே வைத்துள்ளார். தற்போது  16வது ஐபிஎல் போட்டி விறுவிருப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தல தோனி கோலிவுட்டின் முன்னணி இயக்குநரான சுந்தர் சி-யின் தாயாரை நேரில் சென்று சந்தித்துள்ளார். இது குறித்து குஷ்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

photo

photo

அதில், அவர் கூறியதாவதுஹீரோக்கள் உருவாக்கப்படவில்லை, அவர்கள் பிறக்கிறார்கள். தோனி அதை நிரூபித்துள்ளார். எங்கள் சிஎஸ்கே தல தோனி அவரது அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலைப் பார்த்து நான் வார்த்தைகளை இழக்கிறேன். 88 வயதில் தோனியை வணங்கும் ஹீரோ, அவரைத் தாண்டிப் பார்க்க முடியாத என் மாமியாரைச் சந்தித்தார். மஹி, அவள் வாழ்க்கையில் பல வருடங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் சேர்த்திருக்கிறாய். இதற்கு என் பிராணன்கள். இதைச் செய்த சென்னை ஐபிஎல்-க்கு என் நன்றிகள் சாத்தியம்.CSK க்கு விசில் போடு!!”  என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து  அவர் மாமியார் உடனான தோனி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


 

Share this story