பிரபல ஓடிடி தளத்துடன் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்!

tentkottai

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் வெளிநாடுகளில் ஓடிடி தளத்தில் புகழ்பெற்ற டென்ட்கொட்டா (TENTKOTTA) நிறுவனமும் இணைந்து ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டென்ட்கொட்டா தளம் இம்மாதம் முதல் இந்தியாவிலும் தனது சேவையை தொடங்க இருக்கிறது. நடப்பு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படங்கள் மற்றும் சங்கம் பரிந்துரை செய்யும் படங்களை, தகுதியைப் பொறுத்து டென்ட் கொட்டா ஓடிடி தளம் வாங்கும்.மொத்தமாக விலை கொடுத்தோ, குறைந்தபட்ச உத்தரவாதமாக ஒரு விலை கொடுத்தோ அல்லது வருவாயில் பங்கு என்ற முறையிலோ வாங்க அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. பரிந்துரைக்கப்படும் புதிய படங்கள், எந்த முறையில் வாங்கப்படும் என்கிற முடிவை டென்ட்கொட்டா எடுக்கும். இந்த ஒப்பந்தம் 5 வருட காலத்துக்கு செயல்பாட்டில் இருக்கும். திரையரங்கில் 3 மாத காலத்துக்குள் வெளியான திரைப்படங்களை மட்டுமே சங்கம் பரிந் துரைக்கும்” என்று தெரிவித்துள்ளது. டென்ட்கொட்டா ஓடிடி தள இயக்குநர் முருகேசன் கணேசன், இந்த ஒப்பந்தம் மூலம் இரு தரப்புக்கும் பெரிதும் பலன் இருக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Share this story