மிரட்டலான லுக்கில் அரவிந்தசாமி... 'கஸ்டடி' கேரக்டர் போஸ்டர் வெளியீடு !

custody

'கஸ்டடி' படத்தில் நடிகர் அரவிந்தசாமியின் மிரட்டலான கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

 சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கஸ்டடி'. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.  

custody

இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். 

இந்தப் படம் வரும் மே மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தயாரிப்பு பணியில் உள்ள இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் அரவிந்தசாமி வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் அரவிந்த்சாமியின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராஜூ அக்கா ராசு ( "Raju aka Raazu" ) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலான போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story