போலீஸ் கெத்தை காட்டும் ‘Head up High’ பாடல்... ‘கஸ்டடி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

custody

 ‘கஸ்டடி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’.  சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மே மாதம் 12-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. 

custody

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.  இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் சாமி, பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. போலீஸ் கெத்தை காட்டும் இந்த பாடல் ரசிகர்களிடையே  வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story