போலீஸ் ‘கஸ்டடி’யில் நாகசைத்தன்யா- வெளியானது டைட்டில்மற்றும்பர்ஸ்ட்லுக்போஸ்டர்.

PHOTO

நடிகர் நாகசைதன்யாவின் பிறந்தநாளான இன்று அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

photo

முன்னனி இயக்குனரான  வெங்கட் பிரபு தற்போது நேரடியாக   தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில்  புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தின் மூலம் அவர் தெலுங்கு திரையுலகிலும் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நடிகர் நாகசைதன்யாவின் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது.

photo

படத்திற்கு ‘கஸ்டடி’ என பெயர் வைத்துள்ளனர், மிரட்டலான போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதில் போலீஸ் உடையில் இருக்கு நாகசைதன்யாவை  மற்ற போலீஸ் கஸ்டடியில் பிடித்து வைத்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

photo

'கஸ்டடி’ படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி, சம்பத் குமார், சரத்குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர்இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு 11-வது திரைப்படம் மற்றும் நாக சைதன்யாவிற்கு இது 22 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

photo

 

Share this story