மகளின் முதல் பிறந்தநாள், குடும்பத்துடன் ஸ்பெஷல் போட்டோ ஷுட் நடத்தியுள்ள CWC புகழ்...
விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது குக் வித் கோமாளி.சில வருடங்களுக்கு முன் புதுவித கான்செப்டில் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள், நிறைய மொழிகளில் இந்த நிகழ்ச்சி புதியதாக தொடங்கவும் செய்தது.இப்போது விஜய்யில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் ஒளிபரப்பாகி வந்தது, தற்போது முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. விஜய் ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்றதன் மூலம் நிறைய பேர் பிரபலமாகி இப்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள். அப்படி பிரபலமானவர் தான் புகழ், குக் வித் கோமாளி ஷோ அவருக்கு நல்ல ரீச் கொடுக்க இப்போது படங்களிலும் நிறைய வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் புகழ் தனது மகனின் முதல் பிறந்தநாள் ஸ்பெஷலாக தனது மனைவி, மகளுடன் இணைந்து ஸ்பெஷல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
முதன் முதலாக உன்னை என் கைகளில் ஏந்தியதை என்னால் மறக்கவே முடியாது. இனி வரும் காலம் முழுவதும் எங்கள் வாழ்வை கருவறையாக்கி உன்னை சுமக்கப்போகிறோம். மகளாய் வந்துள்ள மகாராணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...🎂❤️🧿 pic.twitter.com/eEEPsZTHlI
— vijaytvpugazh_official (@VijaytvpugazhO) September 26, 2024