ஃபெஞ்சல் புயல் : இன்று சென்னையில் திரையரங்குகள் மூடல்
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இன்று ஒரு நாள் மட்டும் (நவ.30) திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கே 150 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 140 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்கிறது.
‘ஃபெஞ்சல்’ புய இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தற்போது இன்று மாலை கரையைக் கடக்கும் என்று கணித்துள்ளது. புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இன்று ஒரு நாள் மட்டும் (நவ.30) திரையரங்குகள் மூடப்படுவதாக திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.