மீண்டும் இணையும் சூப்பர் ஹிட் கூட்டணி- ‘D 50’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.

photo

தனுஷ் தனது 50வது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் லேட்டஸ்டாக தனுஷிற்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

photo

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ படம் வெளியாகவுள்ளது. அடுத்து அவரது நடிப்பில் இந்தி படம் ஒன்றும் வெளியாகவுள்ளது. தற்போது தனுஷ் தனது 50வது படத்தில் பிசியாக உள்ளார். வடசென்னையை வைத்து கேங்ஸ்டர் கதைகளத்தில் படம் தயாராகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

photo

அதாவது தனுஷ், நித்தியா மேனன் ஜோடி ‘திருசிற்றம்பலம்’ படத்தில் நடித்து  ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்களோ. அதே பாணியை மீண்டும் தனுஷ் பின்பற்ற உள்ளாராம். ஆம்! டி 50 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நித்தியா மேனன் நடிக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. இவர்களுடன் எஸ்.ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் என பலர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Share this story