‘D50’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?..
1702808886800
தனுஷ் நடித்து, இயக்கியுள்ள அவரது 50வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தனங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் எப்போது என்ற தகவல் வந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். வடசென்னையை வைத்து கேங்ஸ்டர் கதைகளத்தில் படம் தயாராகியுள்ளது. படத்தில் தனுஷுடன் இணைந்து துஷாரா விஜயன், சந்தீப் கிஷன்ம் எஸ். ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ‘ராயன்’என பெயரிட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தகவலகள் கசிந்துள்ளது. எது எப்படியோ, படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.