இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் ‘D50’ படம்.

photo

தனுஷ் இயக்கி, நடித்து வரும் அவரது 50வது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

தனுஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வரும் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில். அடுத்து அவரது 50வது படத்தை அவரை இயக்கி நடித்துவருகிறார். துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜெ சூர்யா  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.   வடசென்னையை மைய்யமாக வைத்து படத்தை இயக்கும் தனுஷ் படப்பிடிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் துவங்க உள்ளது. மேலும் படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ளது.

Share this story