ராயன் படத்தின் முதல் பாடல் வெளியானது! அடங்காத அசுரனாக வருகிறார் தனுஷ்

ராயன்

தனுஷ் எழுதி இயக்கும் 'ராயன்' படத்தின் முதல் பாடலான 'அடங்காத அசுரன்' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

Image

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் தனுஷ் எழுதி இயக்கும் படம் ராயன். இப்படத்தில் தனுஷ், விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படம் ஜூன் 13 முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் ராயன் படத்தின் முதல் பாடலான 'அடங்காத அசுரன்' பாடலை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த பாடலை தனுஷ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளனர். மேலும் பிரபு தேவா இந்த பாடலுக்கு நடன இயக்குநராக உள்ளார். 

Share this story