தனுஷுடன் இணைந்த 'ராஷ்மிகா மந்தனா'.

photo

ஹேப்பி டேஸ், லீடர், பிடா, லவ் ஸ்டோரி போன்ற வெற்றிப்படங்களை  கொடுத்த பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷின் 51வது படம் தயாராக உள்ளது. இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், படத்தின் கதாநாயகி யார் என்பதையும் படக்குழு அறிவித்துள்ளனர்.


இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சுமார் 125 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.  ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இந்தபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தாயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அவர் பெயரை அறிவித்துள்ளது. மேலும்  முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜூனா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு .ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த அதிகாரப்பூவ அறிவிப்பு குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா, அதில் கேப்ஷனாக ‘புது பயணத்தின் தொடக்கம்’ என பதிவிட்டுள்ளார். விரைவில் படப்பிடிப்பு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share this story