'டாடா' பார்த்து எமோஷனாகிவிட்டேன்... நடிகர் ராகவா லாரன்ஸ் ட்வீட் !

dada

'டாடா' படத்தைப் பார்த்து எமோஷனாகிவிட்டேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

 பிக்பாஸ் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘டாடா’. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இவர்களுடன் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ளார். 

dada

ஒரு காதல் ஜோடியாக திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாய் வாழ்கின்றனர். இதனால் அந்த பெண் கர்ப்பமாக திருமணம் செய்ய பெற்றோரிடம் சம்மதம் கேட்கின்றனர். ஆனால் அவர்கள் ஒத்துக்காததால் தனியாக வாழ்ந்து வருகின்றனர். அப்போது அவர்களுக்கு குழந்தை ஒன்று பிறக்கிறது. பின்னர் கணவன் - மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்பட குழந்தை தந்தையிடம் கொடுத்துவிட்டு மனைவி சென்றுவிடுகிறார். இதையடுத்து அந்த குழந்தை எப்படி தனி ஆளாக கதாநாயகன் வளர்க்கிறார் என்பதுதான் கதை. இந்த கதையை மிக சுவாரஸ்சியமாக தற்காலத்திற்கு ஏற்றாற்போல் இயக்குனர் கூறியுளளார். 

dada

இந்த படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை நடிகர் ராகவா லாரன்ஸ், கவின் உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்தப் படம் என்னை எமோஷனலாக தொட்டுவிட்டது. குடும்ப படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஒவ்வொருவரும் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும். இயக்குனர் கணேஷ் பாபு, கவின், அபர்ணா உள்ளிட்ட படக்குழுவிற்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளனர். 

Share this story