‘டாடா’ படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் போஸ்டர் – உற்சாகத்தில் ரசிகர்கள்.

photo

டாடா திரைப்படத்தின் ஆடியோ மர்றும் டிரைலர் லான்ச் நாளை நடைபெற உள்ளதாக அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

photo

அறிமுக இயக்குநர் கணேஷ்  கே .பாபு இயக்கத்தில், ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ள திரைப்படம் ‘டாடா’ இந்த படத்தில் ஹீரோவாக பிக்பாஸ் புகழ் கவின் மற்றும் ஹீரோயினாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இவர்களோடு இணைந்து ஹரிஷ், புகழ்,  பிரதீப் ஆண்டனி அகியோர் நடித்துள்ளனர்.  ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர்.

photo

 இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் லான்ச் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி நாளை மாலை 5 மணிக்கு நெக்சஸ் விஜயா மாலில் வெளியீடு நடைபெறும் என படக்குழு தெரியப்படுத்தியுள்ளனர்.  படம் இம்மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.   ரொமாண்டிக் என்டர்டெயினர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளதுஏற்கனவே படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Share this story