மீண்டும் டிரெண்டாக தயாரான, “டாடா” - ஓடிடி ரிலீஸ் பற்றி வெளியான அசத்தல் அறிவிப்பு.

photo

கவினின் ‘டாடா’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

photo

கதை தரமாக இருந்தால் போதும், எந்த பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் எது ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூலை வாரி குவிக்கும் என்பதற்கு ‘டாடா’ திரைப்படமும் ஒரு சான்றாக அமைந்துள்ளது. கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான கவின் நடிப்பில், ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் தயாரான திரைப்படம் “டாடா”, கவுனுடன் இணைந்து இந்த படத்தில், அபர்ணாதாஸ், பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி என பலர் நடித்திருந்தனர்.

photo

பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகி, ரசிகர்களின் குறிப்பாக இளவட்டங்கள் மத்தியில் பேராதரவை, பெற்று 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓளிபரப்பாகி வரும்டாடாதிரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டாடா திரைப்படம் இம்மாதம்  10 ஆம் தேதி அமேசான் ப்ரைம் மற்றும்  சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

photo

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், ‘டாடா’ திரைப்படம் ஓடிடியிலும் சாதனை படைக்கும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Share this story