‘டாடா’ படத்தின் செகெண்ட் சிங்கிள் குறித்த புரொமோ வெளியீடு.

photo

பிக்பாஸ் புகழ் கவின் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாடா’ . சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் தர்போது படத்தின் செகெண்ட் சிங்கிள் குறித்த புரொமோ வெளியாகியுள்ளது.

photo

 ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்து, அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாடா’ இந்த படத்தில்  கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக வலம்வருபவர் கவின், ஹீரோவாக நடித்துள்ளார், இவருக்கு ஜோடியாக  மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இவர்களோடு இணைந்து ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

photo

படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகிவரும் நிலையில், படத்தின் செகெண்ட் சிங்கிள் புரொமோ வெளியாகியுள்ளது. சாண்டி மாஸ்டர் மற்றும் கவின் இந்த புரொமோவில் இடம் பெற்றுள்ளனர். கவினிற்கு சாண்டி மாஸ்டர் நடனமாட கற்று கொடுப்பது போல காமெடி கலந்து இந்த புரொமோ தயாராகியுள்ளது. இதனை பார்க்கும் பொழுது பாடல் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுகிறது. பாடலை ஜென் மார்டீன் மற்றும் வைசாக் இணைந்து பாடியுள்ளனர்.

Share this story