‘இது நம்ம தமிழ் folk-க்கு’.. ‘டாடா’ செகண்ட் சிங்கிள் வெளியீடு !

dada

 கவினின் ‘டாடா’ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 

‘லிப்ட்’ படத்திற்கு பிறகு ‘ஊர்க்குருவி’ மற்றும் ‘டாடா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகர் கவின். அதில் தற்போது ரிலீசுக்கு தயாராகிவுள்ள திரைப்படம் ‘டாடா’. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்து வரும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது.

dada

இந்த மாத இறுதியில் வெளியாகவிருக்கும் இந்த படத்தில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். 

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  'லவ் டுடே' பட பாணியில் உருவாகியுள்ள இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் நம்ம தமிழ் போல்க்கு பாடல் வெளியாகியுள்ளது. அசீக் எழுதிய இந்த பாடலை ஜென் மார்ட்டின் மற்றும் வைசக் இணைந்து பாடியுள்ளனர். நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story