குபீர் சிரிப்பை வரவழைக்கும் ‘டாடா’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி.

photo

ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ்  கே .பாபு இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டாடா’ இந்த படத்தில் ஹீரோவாக பிக்பாஸ் புகழ் கவின் மற்றும் ஹீரோயினாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இவர்களோடு இணைந்து ஹரிஷ், புகழ்,  பிரதீப் ஆண்டனி அகியோர் நடித்துள்ளனர்.  ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகின்றனர். படம் இம்மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

photo

ரொமாண்டிக் என்டர்டெயினர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளதுஏற்கனவே படத்தின் டீசர், பாடல்கள், டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

photo

 குபீர் சீரிப்பை வரவழக்கும் வகையில் அந்த காட்சி அமைந்துள்ளது. காட்சியில் விடிவி கணேஷ், கவின் இடம் பெற்றுள்ளனர். இந்த காட்சி படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரிக்க செய்துள்ளது.

Share this story