டாடா’ படத்தின் டீசர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு.

photo

பிக்பாஸ் புகழ் கவின் நடிப்பில் அட்டகாசமான தயாராகியுள்ள திரைப்படம் ‘டாடா’ . தற்போது இந்த படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

photo

கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக வலம்வருபவர் கவின், அவர் ஹீரோவாக நடித்து, மலையாள நடிகை அபர்ணா தாஸ் ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம்டாடாஇவர்களோடு இணைந்து ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்துள்ளார். ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

photo

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகிவரும் நிலையில், தற்போது படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ‘டாடா’ படத்தின்  டீசர் நாளை மாலை 04:45 மணிக்கு வெளியாகவுள்ளது, அதற்கான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில் விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

Share this story