அனிமல் படத்திற்கு தாதாசாகேப் பால்கே விருது ... நெட்டிசன்கள் விமர்சனம்...

அனிமல் படத்திற்கு தாதாசாகேப் பால்கே விருது ... நெட்டிசன்கள் விமர்சனம்...

அர்ஜூன் ரெட்டி படத்திற்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகி உள்ள திரைப்படம் அனிமல். இப்படத்தில், ரன்பீர் கபூர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சைக்கோ கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. ஹஸ்வர்தன் ராமேஸ்வர் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படம், கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது. 

அனிமல் படத்திற்கு தாதாசாகேப் பால்கே விருது ... நெட்டிசன்கள் விமர்சனம்...

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இதில் அனிமல் படத்திற்காக சிறந்த இயக்குநர், விருது சந்தீப் ரெட்டிக்கு வழங்கப்பட்டது. இதனால், உயரிய தாதாசாகேப் பால்கே விருதுக்கான மதிப்பே போய்விட்டது என கடுமையாக சாடி வருகின்றனர்.
 

Share this story