ரூ.100 கோடி வசூலை நெருங்கும் `தண்டேல்' திரைப்படம்
1739628383853
சந்தூ மொண்டேடி இயக்கத்தில் ’தண்டேல்' படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.இந்நிலையில் திரைப்படத்தின் 8 நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் இதுவரை 95.20 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

