எனக்கும் சொத்துக்கும் ஆபத்து.. மகன்- மருமகள் மீது நடிகர் மோகன் பாபு புகார்

mohan babu

பழம்பெரும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு தனது மகன் மஞ்சு மனோஜ் மற்றும் மருமகள் மோனிகா ஆகியோர் தன்னை மிரட்டுவதாகவும் அவர்கள் மூலம் தனக்கு ஆபத்து இருப்பதாவும் போலீசில் புகார் அளித்துள்ளார். எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மோகன் பாபு தனது புகாரில் கூறியதாவது, மனோஜ் சில சமூக விரோதிகளுடன் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை ரங்காரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் அருகே ஜல்பல்லியில் தனது வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்தார். எனக்கும், எனது சொத்துக்களுக்கும் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளதால் நான் அஞ்சுகிறேன். இந்த நபர்கள் என்னைத் துன்புறுத்தும் நோக்கத்துடன் வெளியே சென்ற நான் மீண்டும் வீடு திரும்புவதற்காகக்
காத்திருந்தனர் என்பதை அறிந்து நான் பயந்துவிட்டேன். என்னை நிரந்தரமாக என் வீட்டைபயந்துவிட்டேன். என்னை நிரந்தரமாக என் வீட்டை கைவிட அவர்கள் நிர்ப்பந்திக்கிறார்கள்.   

mohan babu

எனக்கும், என் வீட்டில் இருப்பவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள் என்று மோகன் பாபு தெரிவித்துள்ளார். மனோஜ், மோனிகா மற்றும் அவர்களது கூட்டாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றும் அவர்களை தனது சொத்துக்களிலிருந்து வெளியேற்றுமாறும் மோகன் பாபு போலீசை வலியுறுத்தியுள்ளார்.முன்னதாக, மனோஜ் மஞ்சு தனது தந்தையால் தாக்கப்பட்டதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது மகனுக்கு எதிராக மோகன் பாபு புகார் அளித்துள்ளார்.
தந்தை மகன் இருவருக்கும் இடையில் சொத்து தொடர்பான தகராறால் சுமூகமான உறவு இல்லை என தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story