மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி திரைப்படம்.. 'BP 180' பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

daniel balaji
தனித்துவமான நடிப்பின்மூலம் யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி (48). வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் முதல் வட சென்னை படம் வரை தனது நடிப்பால் தனியான முத்திரை பதித்தவர் இவர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் டேனியல் பாலாஜி கடைசியாக நடித்த "BP180" படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. ATUL INDIA MOVIES சார்பில் அதுல் M போஸ்மியா தயாரிதுள்ள இப்படத்தை இயக்குநர் ஜேபி இயக்கியுள்ளார். நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் டேனியல் பாலாஜி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தான்யா மற்றும் டானியல் வாலாஜி இடம்பெற்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய படமாக BP 180 இருக்கும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


 

Share this story