திவ்யபாரதி உடன் டேட்டிங்? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ்

gvp

நடிகை திவ்யபாரதி உடன் டேட்டிங்கில் இருக்கிறார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் என தகவல்கள் பரவி வந்தன. இதற்கு ஜி.வி.பிரகாஷ் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

‘கிங்ஸ்டன்’ படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இதற்காக அளித்த பேட்டியில் “நான் ஏதோ திவ்யபாரதி உடன் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. அவரை படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே நான் சந்தித்தது உண்டு. படப்பிடிப்பு தளத்தினை தாண்டி வெளியே எங்கேயும் அவரை சந்தித்தது இல்லை. எனக்கு திவ்யபாரதி ஒரு நல்ல நண்பர் மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார்.

 gvp
இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக நடித்திருப்பது திவ்யபாரதிதான். ‘பேச்சிலர்’ படத்துக்குப் பின் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ளது. இந்தப் பேட்டியின்போது திவ்யபாரதியும் உடன் இருந்தார். இந்தப் பதிலின்போது “எனக்கும் பலர் மெசேஜ் அனுப்புவார்கள். உடனே இவருக்கு அனுப்புவேன். இவரோ விடுங்க பார்த்துக் கொள்ளலாம் என்பார். சில சமயங்களில் கஷ்டமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். மார்ச் 7-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘கிங்ஸ்டன்’. கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், சேத்தன், இளங்கோ குமாரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

Share this story