மகள் திருமணம்... முதல்வருக்கு அழைப்பு தந்த நடிகர் பிரபு

மகள் திருமணம்... முதல்வருக்கு அழைப்பு தந்த நடிகர் பிரபு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனான பிரபு சினிமாவில் ஹீரோவாக நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் விக்ரம் பிரபுவும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் பிரபுவின் மகளுக்கும் பிரபல இயக்குநருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ள தகவல் வெளியானது. அந்த இயக்குநர் யார் என்றால் சமீபத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யாவை வைத்து சூப்பர் ஹிட் படமான மார்க் ஆண்டனி படத்தை கொடுத்த ஆதிக் ரவிடந்திரன் தான் அவர். இவர்கள் இருவரும் காதலித்து பின் பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகள் திருமணம்... முதல்வருக்கு அழைப்பு தந்த நடிகர் பிரபு

இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் பிரபு, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்து விடுத்துள்ள செய்தி வெளியாகி இருக்கிறது. 

Share this story