தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் டேவிட் வார்னர்...!

david warner

தெலுங்கில் உருவாகி வரும்  ‘ராபின்ஹுட்’ படத்தின் மூலம் ஆஸ்திரேலியே கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்  நடிகராக அறிமுகமாகிறார். 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின், ஸ்ரீலீலா, லால், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராபின்ஹுட்’. இப்படம் மார் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.


இந்நிலையில், ஹைதராபாத்தில் ‘கிங்ஸ்டன்’ படத்தின் தெலுங்கு பதிப்பின் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘ராபின்ஹுட்’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைப்பாளர் என்பதால், அப்படக்குழுவினர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவிஷங்கரிடம்  ‘ராபின்ஹுட்’ அப்டேட் வேண்டும் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட போது “ராபின்ஹுட் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் டேவிட் வார்னர் நடிகராக அறிமுகமாகிறார் ” என்று குறிப்பிட்டார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

Share this story