'டிடி நெக்ஸ்ட் லெவல்' : நடிகை கஸ்தூரி கதாபாத்திர போஸ்டர் ரிலீஸ்...!

'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் நடித்துள்ள நடிகை கஸ்தூரியின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Bridging the gap between Bakthi and Bottoms up with her duality🤩
— Nikil Murukan (@onlynikil) May 11, 2025
Introducing @KasthuriShankar as #Kissa47’s mother, Devaki and Shilpa from the world of #DevilsDoubleNextLevel 💫 #HappyMothersDay#DevilsDoubleNextLevelFromMay16@iamsanthanam @arya_offl @TSPoffl @NiharikaEnt pic.twitter.com/ALZlL0fX36
இந்த திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திற்கு தணிக்கை குழு U / A சான்று வழங்கியுள்ளது. தற்போது படக்குழு நடிகை கஸ்தூரியின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கஸ்தூரி சந்தானத்தின் அம்மாவாக தேவகி என்ற கதாபாத்திரத்திலும், ஷில்பா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.