'டிடி நெக்ஸ்ட் லெவல்' : கவுதம் வாசுதேவ் மேனன் கதாபாத்திர போஸ்டர் ரிலீஸ்...!

dd next level

'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் நடித்துள்ள இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

dd next level

அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

gvm
 
இந்த திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திற்கு தணிக்கை குழு U / A சான்று வழங்கியுள்ளது. படத்தில் இடம்பெற்ற கிஸ்ஸா பாடல் சர்ச்சை ஆன நிலையில் அதனை படக்குழு நீக்கியதாக அறிவித்தது. தற்போது படக்குழு கவுதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story