செம்ம குத்து குத்தும் ‘பிரெஞ்ச் குத்து’... சந்தானத்தின் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ வீடியோ பாடல் வெளியீடு !

DD Returns

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயக்குனர் பிரேமானந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஹாரர் காமெடியில் உருவாகி வரும் இந்த படத்தை ஆர்கே என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. சந்தானத்தின் வழக்கமான காமெடியுடன் திகிலுடன் இப்படம் உருவாகியுள்ளது. 

DD Returns

ஷேம்லஸ் சதீஷ் என்ற  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கதாபாத்தில் சந்தானம் நடிக்கிறார். 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூலம் பிரபல நடிகை சுரபி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவர் புதுச்சேரி பிரெஞ்சு பெண்ணாக நடித்துள்ளார். இவர்களுடன் ரெடி கிங்ஸ்லி, மாறன், மொட்டை ராஜேந்திரன், சங்கர், விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இப்படத்தில் ஆப்ரோ இசையில் உருவாகியுள்ள ‘பிரெஞ்ச் குத்து’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் துரை எழுதிய இந்த பாடலை கானா முத்து மற்றும் ஆப்ரோ இணைந்து பாடியுள்ளனர். செம குத்து குத்தும் இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story