ஓடிடி தளத்தில் சக்கைப்போடு போடும் டிடி ரிட்டன்ஸ்

ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'டிடி ரிட்டன்ஸ்'. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, செப்டம்பர் 1-ம் தேதி இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், இதுவரை வெளியான படங்களில் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் சாதனை படைத்து வருகிறது.