‘டிடி ரிட்டன்ஸ்’ வெற்றி – பாராட்டு தெரிவித்த படக்குழு!

photo

இயக்குனர் பிரேமானந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில்டிடி ரிட்டன்ஸ்திரைப்படம்  வெளியாகியுள்ளது, கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு நாயகன் சந்தானத்திற்கு மாலை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

photo

டிடி ரிட்டன்ஸ் படத்தில் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூலம் பிரபல நடிகையான சுரபி இந்த படத்தில் புதுச்சேரி பிரெஞ்சு பெண்ணாக நடித்துள்ளார்இவருடன் இணைந்து ரெடி கிங்ஸ்லி, மாறன், மொட்டை ராஜேந்திரன், சங்கர், விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்ஹாரர் காமெடி கதைகளத்தில் தயாரான இந்த படம் வெளியான மூன்றே நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 11 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.9 கோடியும் வசூலித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  திரையரங்கில் சக்கைப்போடு போட்டுவரும் டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றி கொண்டாட்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் பரவி பாராட்டுகளை பெற்று வருகிறது.

Share this story